க. தயாளன், அச்சிறுப்பாக்கம்.

குருநாதர் அவர்களுக்கு வணக்கம். எனது நண்பர் கன்னியப்பன் மகன் கமலேஷ் திருமணம் தடையாக உள்ளது. எப்போது நடக்கும்?

Advertisment

கமலேஷ்குமார் மகர ராசி, துலா லக்னம், அவிட்ட நட்சத்திரம். 2019 செப்டம்பரில் 30 வயது முடியும். அதன் பிறகு திருமண யோகம் வரும்.

● ராஜேந்திரன், சிதம்பரம்.

என் மகன் சிவசுந்தர்ராஜனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? பெண் எத்திசையி-ருந்து அமையும்? கடைசிவரை தனியார் நிறுவனப் பணிதானா? அல்லது வெளிநாட்டு வேலை அமையுமா?

சிவசுந்தர்ராஜனுக்கு கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம், ரிஷப லக்னம். ராசியில் கேது; அதற்கு ஏழில் ராகு. லக்னத்துக்கு 8-ல் சனி. 4-ல் செவ்வாய். சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். 7-ல் சுக்கிரன்! ஆக களஸ்திர தோஷம், புத்திர தோஷம் உள்பட எல்லா தோஷங்களும் உ ண் டு . தி ரு ம ண த் தி லு ம் குழப்பம், பிரச்சினைகள். காதல் திருமணம், கலப்புத் திருமணம் போன்ற சூழ்நிலைகளுக்கு இடமுண்டு. என்றாலும் 2-ல் குரு அமர்ந்து சனியைப் பார்ப்பதால், பரிகார ஹோமம் செய்தால் முறையான திருமணம் 33 வயதில் நடக்கலாம். காரைக்குடியில் சு ந் த ர ம் கு ரு க் களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) பேசவும். காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் உள்பட 19-20 வகையான ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும்.

● பி.வி. அசோகன், சிங்கப்பூர்.

Advertisment

உங்களுடைய "ஓம்',"பாலஜோதிடம்' ராசி பலன் கள்தான் எனக்கு வழிகாட்டி யாக இருக்கிறது. எனக்கு அடிமை வேலையா? கூட்டுத் தொழிலா- சொந்தத் தொழிலா? மனைவிக்கு வெளிநாடுவாழ் யோகம் உண்டா? மூத்த மகன் 30வயது. வெளிநாடு சுற்றி வருகிறான். சம்பாத்தியம் இல்லை. எனவேதிருமணம் செய்து வைக்க யோசனை யாக உள்ளது. நடுப்பையன் பி.ஈ., அரியர்ஸ்எழுதி உள்ளான். பட்டம் வாங்குவானா?கடைசிப் பெண் ஒன்பதாவது வகுப்பில் பெயில். எல்லா ஜோதிடர்களும் டாக்டருக்கு படிப்பாள் என்கிறார்கள்.

அசோகன் மிதுன லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். 61 வயது நடப்பு. 58 வயது முதல்புதன் தசை. லக்னாதிபதி தசை 5-ல் இருந்துநடத்துகிறார். அதன் யோகத்தை விரயச்சனிதடுக்கிறது. 2020-க்குமேல் சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு, புதன் தசை யோகமாக இருக்கும். இது3-ஆவது சுற்று என்றாலும், ராசிநாதனேசனி என்பதால், ஏழரைச்சனியைக் கண்டு பயப்பட வேண்டாம். 5-ல் குரு, புதன், சூரியன். இதில் புதன்- சுக்கிரன் பரிவர்த்தனை. ஆயுள் பலமுண்டு. பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமை களைச் செய்ய காலமும் கடவுளும் துணை புரியும். சொந்தத் தொழில் புரியலாம். மனைவிக்குமேஷ ராசி, தனுசு லக்னம். 62 வயதுவரை ராகுதசை. உள்நாட்டில் மத்திமப் பலனாக ஓடும். முத்துவிநாயகன் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். களஸ்திர தோஷமும், புத்திரதோஷமும் உண்டு. அதனால் 35 வயதுக்கு மேல்தான் திருமண யோகம் வருகிறது. உங்கள் நாட்டுக் கோவி-ல் தமிழ்நாட்டு அர்ச்சகர்கள் இருந்தால், அவர்களைத் தொடர்புகொண்டு காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து, அவருக்கு கலச அபிஷேகம்செய்யலாம். அந்த ஹோமத்தில் தட்சிணா மூர்த்தி, ஹயக்ரீவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம்(படிப்புக்காக) செய்து ரமேஷ்ராஜாவுக்கும், ராஜேஸ்வரிக்கும் கலச அபிஷேகம் செய்யலாம். இத்துடன் தன்வந்தரி ஹோமம், மிருத்யுஞ்சய ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவ ஹோமம் போன்ற பல ஹோமம் செய்து நீங்களும் மனைவி யும் (மொத்தம் ஐவருக்கும்) கலச அபிஷேக செய்யலாம். சிங்கப்பூரில் அந்த வசதி இல்லா விட்டால், எல்லாரும் தமிழ்நாடு வந்து காரைக் குடியில் சுந்தரம் குருக்களிடம் மேற்படி ஹோமம்செய்து, குடும்பத்தார் அனைவரும் கலசஅபிஷேகம் செய்துகொள்ளலாம். பிள்ளை யார்பட்டி விநாயகரையும் தரிசனம் செய்யலாம்.

● பாலாஜி, சென்னை.

என் அக்கா மகன் பொன் புவனேஷ்கடந்த சில மாதங்களாக பள்ளிக்குச் செல்ல மறுக்கிறான். சில நேரங்களில் படிக்கவே பிடிக்கவில்லை என்கிறான். பெரிய மனிதனைப்போல பேசுகிறான். என் மாமா (சரவணன்) வேலையிலும் பிரச்சினை. வேலை மாறுமா? அல்லது சுயதொழில் செய்யலாமா? என் அக்கா (வசந்தி) கர்ப்பப்பையிலும் பிரச்சினை. இரண்டாவது குழந்தை பிறக்குமா? அவர்கள் எப்போது நிம்மதியாக வாழ்வார்கள்?

Advertisment

சரவணனுக்கு சதய நட்சத்திரம், கும்ப ராசி.42 வயது. சிம்ம லக்னத்துக்கு 6-க்குடைய சனி தசை, லக்னத்தில் இருந்து நடக்கிறது.10-ஆம் இடத்துக்கு 8-ல் சனி தற்போது இருக்கிறார். பார்க்கும் வேலை இழப்பாகும்.வேறு வேலை தாமதமாக அமையும். அக்காள்வசந்திக்கு ரிஷப லக்னம். 8-ல் சனி. மீன ராசி,உத்திரட்டாதி நட்சத்திரம், சுக்கிர தசைநடப்பு, கர்ப்பப்பையில் கட்டி இருக்கும்.

ஆபரேசன் செய்யவேண்டிய அவசியம்ஏற்படும். பொன் புவனேஷ் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். 11 வயது முடிந்து12 ஆரம்பம். புதன் தசை. கேது சாரம். படிப்புதடைப்படும். 2020 வரை போராட்டம்,எதிர்நீச்சல், வருமானத்தடை, வைத்தியச் செலவு, விரயச்செலவு. வசதியிருந்தால்அதற்கான ஹோமம் செய்து மூவரும் கலச அபிஷேகம் செய்துகொண்டால் ஓரளவு சாந்தி கிடைக்கும்.

● ஜி. பிரபாவதி, சேலம்.

நான் எம்.ஏ., பி.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி.

அரசுப்பணி கிடைக்குமா?எப்போது?

கும்ப லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத் திரம். ஜென்மச்சனி நடப்பு. 2020 சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு அரசு வேலை அமையும்.முன்னதாக, இ ர ண் டு பரிகாரம் செய்யவண்டும் . ந ங் க வ ள் ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு ஒருஅபிஷேக பூஜை செய்யவும். சனிக்கிழமை தோறும் 36 மிளகை ஒரு சிவப்புத்துணியில்பொட்டலம் கட்டி, நெய்யில் மிளகுப்பெட்டலத்தை நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபம் ஏற்றவும். -2020 சனிப்பெயர்ச்சி வரை.

f

● எம்.எம். கிருஷ்ணன், சின்னமனூர்.

1994 முதல் தங்களின் வாசகன். என் கடன் பிரச்சினைக்கு தீர்வு எப்போது? ஒரே மகள் சந்தியாவிற்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?

சந்தியா சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். சூரியன், சனி, ராகு சேர்க்கை கெடுதல்தான். அத்துடன் குரு 12-ல் மறைவு. குரு தசை, குரு புக்தி. படிப்பு தடைப்படும். இடப்பெயர்ச்சி ஏற்படும். கையில் செல்போன் இருந்தால் பிடுங்கிவிடவும். 2020-ல் ஏழரைச்சனி ஆரம்பிக்கும்போது நல்ல புத்தி வர ஹோமம் செய்யலாம். தங்கள் அண்ணனை கலந்துகொள்ளச் செய்யவும்.

● ஐஸ்வர்யலட்சுமி, இடிகரை (கோவை).

என் கணவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து தனியார்துறையில் பணிபுரிகிறார்.நான் கம்ப்யூட்டர் டெக்னாலஜி முடித்துள் ளேன். இரண்டு குழந்தைகள் பிறந்ததும் பார்த்த வேலையை விட்டுவிட்டேன். மீண்டும் வேலைக்குப் போகலாமா? இரு குழந்தைகளும் சிம்ம ராசி. அதனால் பிரச்சினை வருமா?

ஐஸ்வர்யா பூர நட்சத்திரம், சிம்ம ராசி.ராஜேஷ் ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். ராகு தசை முடிந்தாலும் 2020 வரை அட்ட மச்சனி நடக்கிறது. பிள்ளைகள் இருவருக்கும் மக நட்சத்திரம், சிம்ம ராசி, சுக்கிர தசை. கணவரைத் தவிர, உங்கள் மூவருக்கும் சனி பாதிப்பில்லை. மூவரும் சிம்ம ராசி. பிப்ரவரி 13-ல் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மாற்றம் உண்டாகும். 2020 வரை நீங்கள்தான் பொறுமையாகப் போக வேண்டும். 45 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் நெய் விளக்கில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து 2020 சனிப் பெயர்ச்சிவரை தீபமேற்றவும். குடும்பத்தில்அமைதியும் ஆனந்தமும் ஏற்படும். அதன்பிறகு வேலை கிடைக்கும்.

=====================

சந்திராஷ்டம தினங்கள்

தனுசு: 20-1-2019 இரவு 12.30 மணிமுதல் 22-1-2019 இரவு 3.00 மணிவரை சந்திராஷ்டமம். உடல்நலத்தில் சற்று அக்கறை காட்டுவது அவசியம். வீண் கற்பனை பயம் மனதை வருத்தும். உடல்சோர்வு, அசதி போன்றவற்றை சந்திக்கநேரும். பிள்ளைகள் பற்றிய கவலை ஏற்படும். குடும்பத்தில் குழப்பம், தொழில் மாற்றம் ஆகிய பலன்கள் ஏற்படலாம். நண்பர்களின் நல்லுதவி உண்டாகும். காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மகரம்: 22-1-2019 இரவு 3.00 மணிமுதல் 24-1-2019 பின்னிரவு 5.30 மணிவரை சந்திராஷ்டமம். (25-1-2019 அதிகாலை). பொருளாதாரத்தில் கஷ்டம், தொழிலில் குழப்பம், காரியத்தில் தடை, அபகீர்த்தி, ஏமாற்றம், கடன் தொல்லை, வைத்தியச்செலவு, கௌரவப் பிரச்சினை போன்ற பலன்களைக் காணநேரிடும். புதிய முதலீடு மற்றும் புதிய முயற்சிகள் போன்றவற்றைத் தள்ளிப்போடுவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் ஆதாயம் தரும்வகையில் அமையும். ஆஞ்சனேயரை வழிபடவும். துளசி மாலை சாற்றலாம்.

கும்பம்: 25-1-2019 அதிகாலை 5.30 மணிமுதல் 27-1-2019 காலை 9.00 மணிவரை சந்திராஷ்டமம். சிலர் வேலை வாய்ப்புக்காக குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம். வெளியூர்ப் பயணம், சுபமங்கலச் செலவு, அரசாங்க காரியத்தில்அனுகூலமான பலன்கள் ஏற்படலாம் என்றாலும், குடும்பத்தில் உள்ளவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மனதில் சந்தோஷமின்மை, நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகலாம். உறவினர்களுக்குள் மனவருத்தம் நேரலாம். ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளலாம். தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபடவும்.